சிகரெட் புகையினை விடவும் ஆபத்தானது ஊதுவர்த்தி புகை…

உங்களது வீட்டில் நறுமணம் பரவ வேண்டும் என்பதற்காகவும், தியானம் செய்யும் போதும், தெய்வங்களை வணங்குவதற்காகவும் ஊதுவர்த்தி ஏற்றுவீர்கள்.

இதன் வாசனை உங்களுக்கு நல்ல உணர்வை கொடுத்தாலும், ஊதுவர்த்தியை அதிகமாக பயன்படுத்துவது தீய விளைவுகளை விளைவிக்கும்.

ஊதுவர்த்தியின் புகையானது செல்களில் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது DNA போன்ற மரபணு மூலக்கூறுகளை மாற்றியமைக்கலாம்.
இது புற்றுநோய் வளர்ச்சிக்கு பொறுப்பாகிறது.