சிகரெட் விலையில் அதிகரிப்புடன் 15 % பெறுமதி சேர் வரியும் சேர்ப்பு.

புகையிலை பொருட்களின் விலையை அதிகரிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு அமைவாக சிகரட் விலை நேற்று(29) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிகரெட்டுகளுக்கு 15 சதவீத பெறுமதி சேர் வரி சேர்க்கப்பட்டுள்ளதுடன் உற்பத்தி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.