(FASTNEWS | COLOMBO) – இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சிக்கர் தவான் இன்று(11) மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளார்.
அவரது இடது கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் தன்மை குறித்து தீர்மானிப்பதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 09ம் திகதி அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியின் பின்னர் அவர் வலியை உணர்ந்த நிலையில், அடுத்தப் போட்டிகளில் விளையாடுவதற்கு இந்த உபாதை தடையாக இருக்குமா? என்று இந்த பரிசோதனை மூலம் தெரியவரும் என இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.