சிங்கப்பூர் ஆசியப் பொருளாதாரத்தின் சிங்கம் – மோடி

ஆசியப் பொருளாதாரத்தின் சிங்கமாக சிங்கப்பூர் திகழ்கிறது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சிங்கப்பூரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லீ ஹிசைன் லூங் அளித்த விருந்து உபச்சாரத்தில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; ஆசியச் சிங்கங்கள் தற்போது குஜராத்தில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், ஆசியப் பொருளாதாரத்தின் சிங்கம் இங்கு சிங்கப்பூரில்தான் இருக்கிறது என்று புகழாரம் சூட்டினார்.

இந்திய தொழில்துறை மாற்றத்தின் ஒவ்வொரு பகுதியிலும் சிங்கப்பூர் மிக முக்கிய கூட்டாளியாக உள்ளது என்றும் மோடி கூறினார்.

இரு நாட்டுத் தலைவர்களும் 9 துறைகளில் ஒப்பந்தங்கள் அடங்கிய கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர்.