சிங்கப்பூர் சென்றடைந்தார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்…

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன், வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இரண்டு நாட்களுக்கு முன்னரே சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்- வட கொரிய தலைவர் கிம் சந்திப்பு, சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் நடைபெற உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியை வட கொரியா தலைவர் சந்திக்க உள்ளது இதுவே முதல் முறையாகும்.