சிங்கராஜா வனத்தில் தப்பியிருந்த ஒரேயொரு வௌ்ளை எருமை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிங்கராஜா வனத்துக்கு அருகிலுள்ள தேயிலைத் தோட்டமொன்றில் குறித்த வெள்ளை எருமையானது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி விழுந்து கிடப்பதை அவதானித்த பிரதேசவாசிகள் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்ததனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் எருமையின் சடலத்தை மீட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.