சிங்கள கொடி பறக்க முடியுமென்றால் புலிக்கொடிக்கு ஏன் தடை – சிவஞானம் நாடாளுமன்றில் கேள்வி..

தேசியக் கொடியில் தமிழ், முஸ்லிம் மக்களை அடையாளப்படுத்தும் நிறங்களை அகற்றி விட்டு தனிச் சிங்களக் கொடியை தமிழர் பிரதேசத்தில் பறக்கவிட அனுமதிக்க முடியுமென்றால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரின்றி புலிக்கொடிகளை நாங்கள் ஏன் பயன்படுத்த முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஒரு விதத்திலும் சிங்கள மக்களுக்கு ஒரு விதத்திலும் சட்டம் செயற்படுத்தப்படுகிறதாக மக்கள் அஞ்சுகின்றதாக நேற்று(24) பாராளுமன்றில் தெரிவித்த சிவஞானம் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றகையில்;

கடந்த சில நாட்களாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஞானாசார தேரரால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டுள்ளன. கடைகள் எரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வெளியில் நடமாடப் பயப்படுகின்றனர் என தெரிவித்திருந்தார்.

 

(rizmira)