இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொழும்பு ரோயல் கல்லூரி மாணவனை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (26) கொழும்பு மேலதிக நீதவான் ஷானிமா விஜேபண்டார முன்னிலையில் நடைபெற்ற போது சந்தேக நபரான மாணவன் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த கோரிக்கையினை நீதவான் நிராகரித்துள்ளார்.
சந்தேக நபரான முஸ்லிம் மாணவன் சிங்களவர் ஒருவரின் பெயரில் முகப்புத்தகத்தில் இனங்களுக்கிடையில் வன்முறைகளை ஏற்படுத்தும் விதமான பதிவுகளை மேற்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.