சிசிலியாவுக்கு ஒரு வழக்கில் பிணை மற்றுமொரு வழக்கில் விளக்கமறியல்

பினான்ஸ் என்ட் கெரன்ட் நிறுவனத்தில் இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவலைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும், 4 சரீரப் பிணையிலும் இவர் விடுதலை செய்யப்படுவதாக கொழும்பு மாவட்ட நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று உத்தரவிட்டு்ள்ளார்.

இதேவேளை, இவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வழக்கிலிருந்து இவர் விடுதலை செய்யப்பட்டமையை அடுத்து கோட்டை நீதிமன்றில் ,இவர் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்றுமொரு வழக்கு சம்பந்தமாக சிசிலியா மீண்டும் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.