சிசிலியாவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

பினாஸ் அன்ட் கிரடிட் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் நிதியை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவலவுக்கான விளக்கமறியல் எதிர்வரும் 25ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார். அவர், இந்த வழக்கின் 8 ஆவது சந்தேகநபராவார். சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.