‘சிபெட்கோ’ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பல மூடக் காரணம் இதுதான்…

கையிருப்பில் இருந்த எரிபொருள் தொகையானது நிறைவுற்ற நிலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொரட்டுவ, கனேமுல்ல மற்றும் கொழும்பு அண்டிய பிரதேசங்களில் அமையப் பெற்றுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான நிரப்பு நிலையங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

ஐ.ஓ.சி நிறுவனத்தின் எரிபொருள் விலை அதிகரிப்பினால் எரிபொருள் வாடிக்கையாளர்கள் பலர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் அளவுக்கு அதிகமாக எரிபொருள்களை கொள்வனவு செய்துள்ளமையே குறித்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என கூறப்படுகின்றது.

 

 

-Rishma