சிம்பாப்வேயில் இடம்பெற்ற லொறி விபத்தில் 21 பேர் உயிரிழப்பு…

சிம்பாப்வேயில் லொறி கவிழ்ந்த விபத்தில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 21 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், சம்பவ இடத்தில் 15 பேரும், மருத்துவமனையில் 6 பேரும் உயிரிழந்துள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குறித்த லொறியில் 69 க்கும் மேற்பட்ட பயணிகள் நேற்று பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.