சிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுடன் இடம்பெறவுள்ள கிரிக்கெட் தொடரை கருத்திற் கொண்டு 30 பேர் கொண்ட பயிற்சிக் குழாமொன்றை இலங்கை கிரிகெட் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் , லசித் மாலிங்க கடந்த தினத்தில் ஊடகங்களில் வௌியிட்டிருந்த கருத்து தொடர்பில் விசாரிக்க அவர் அதிகாரிகளால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அங்கு , இலங்கை கிரிக்கெட்டின் முகாமையாளர் அசங்க குருசிங்க இது தொடர்பில் மாலிங்கவிடம் விடயங்களை விசாரித்துள்ளதாக தெரிகிறது.
எனினும், இது குறித்து வினவுகையில், அவ்வித சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அசங்க குருசிங்க தெரிவித்திருந்தார்.
இதேவேளை , நான்கு பேர் அடங்கிய இலங்கை கிரிக்கட் தேர்வுக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் 30ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
அதன்படி , புதிய தேர்வுக்குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவதானம் செலுத்தியுள்ளார்.
தற்போதைய தேர்வுக்குழுவில் ஒருவர் மாத்திரம் மாற்றப்படலாம் என இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வீரர் மாலிங்கவாக இருக்கக் கூடும் என ரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.