சிம்பாப்வே அணி இக்கட்டான இலக்காக 387 ஓட்டங்களை இலங்கைக்கு விதித்தது.. (LIVE)

சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று(17) நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டநேர நிறைவின் போது, தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய சிம்பாப்வே அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 377 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்படி இலங்கைக்கான இலக்காக 387 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிம்பாப்வே அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 356 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதலாவது இனிங்சிற்காக 346 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=Pl5sZTSxjQc” width=”560″ height=”315″]

(rizmira)