சிம்பாவ்பே அணியினை வெற்றி கொண்ட இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்..

சிம்பாவ்பே அணிக்கெதிரான நேற்றைய(06) போட்டியில் உரிய கால நேரத்தின் போது பந்து வீச்சை நிறைவு செய்யாத காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு அபராதம் விதிக்க போட்டி நடுவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி , போட்டியின் சம்பளத்தில் இருந்து 20% அபராதம் மேத்யூஸ் இற்கும் அணியின் மற்றைய வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 10% அபராதம் விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

(rizmira)