சிரியாவின் டமஸ்கஸில் குண்டுத் தாக்குதல் 15 பேர் பலி…

சிரியாவின் டமஸ்கஸ் நகரில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இரண்டு தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள், பொலிசார் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள பொலிஸ்  நிலையத்தில் நேற்று(02) நுழைந்த தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு தலைநகர் டமஸ்கஸில் நடந்த முதல் தாக்குதல் இது என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாகவும், அதன் பின்னர் தீவிரவாதிகள் குறித்த விபரங்கள் தெரியவரும் என்றும் அவர் கூறினார்.