சிரியாவில் அரசுப் படைகளின் தொடர் தாக்குதல் – 5 நாட்களில் 400 பேர் உயிரிழப்பு…

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருவஹாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 5 நாட்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஐந்து நாட்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 403 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதில் 95 குழந்தைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.