சிரியாவில் உள்ள டேர் எஸ்ஸார் மாகாணத்தில் மயாதீன் என்ற கிராமத்தில் நோன்பு நேரத்தில் உணவு சாப்பிட்ட 2 இளைஞர்களை தூக்கிலிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமியர்கள் ரமழான் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் 18 வயதுள்ள இரண்டு இளைஞர்கள் பகல் நேரத்தில் உணவை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் மத அவமதிப்பு செய்ததாக கூறி 2 பேரையும் ஹிஸ்பா என்ற இடத்தில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமை அலுவலகத்தின் முன்பு மரதூணில் தூக்கிலிட்டு கயிற்றில் தொங்க விட்டனர்.
இவர்கள் மத அவமதிப்பு செய்து நோன்பை முறித்தவர்கள் என அவர்களது உடலில் வாசகங்கள் எழுதிய அட்டையை தொங்க விட்டிருந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.