சிரியாவில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விமானத் தாக்குதல்…

சிரியாவில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் விமானத் தாக்குதல்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தலைநகர் டமஸ்கஸ்சின் புறநகர் பகுதியாக குவட்டாவில் கடந்த ஒரு வாரகாலமாக நடத்தப்படும் கடுமையான குண்டுத் தாக்குதல்களில் பச்சிளங் குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எந்தவொரு தாமதமும் இன்றி 30 நாட்களுக்கு யுத்த நிறுத்தத்தை அமுல்படுத்துமாறு தீர்மானமொன்றின் மூலம் ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்திருந்தது.

எனினும் குறித்த இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சில மணித்தியாலங்களில் தரைவழித் தாக்குதல் உள்ளடங்கலாக விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

யுத்த நிறுத்த தீர்மானத்திற்கு மதிப்பளித்து செயற்படுமாறு சிரிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஷ்யாவை வலியுறுத்தியுள்ளன.

ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு உதவுமாறு தொலைபேசி ஊடான கலந்துரையாடலில் ஜேர்மன் அதிபர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி ஆகியோர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டீனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

####