சிரியாவில் 2 பெண்களின் தலையை கொய்து ஐ.எஸ். அட்டூழியம்

சிரியாவில் முதல் முறையாக பெண்களின் தலையை வெட்டி ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொடூரமாக கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐ.எஸ். பயங்கரவாதிகள் பெண்களை இதுபோன்று படுகொலை செய்ததாக செய்தி வெளியாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

சிரியாவின் தையர் அல்- ஸோர் மாகாணத்தில் இரண்டு பெண்களை கடந்த திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் தலையைத் துண்டித்து கொலை செய்ததாக சிரியாவில் இருக்கும் போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இருபெண்களுள் ஒருவர், அவரது கணவரோடு கொலை செய்யப்பட்டதாகவும், இந்த தம்பதியினர் பில்லி, சூனியம் வைத்ததாக குற்றம்சாட்டப்பட்டதை அடுத்து தண்டனை அளிக்கப்பட்டதாகவும் இவர்களுக்கு உதவிய மற்றொரு பெண்ணின் தலையும் கொய்யப்பட்டதாகவும் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

(riz)