சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் – சிரிய அரசு..

சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு, 6 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபருக்கு எதிராக புரட்சி படை ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் சிரிய அரசுக்கு ரஷ்யா ஆதரவாக உள்ளது.

உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தீவிரவாதிகள், புரட்சிப்படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளையும் மீட்பதற்கு சிரியா ராணுவம் போராடி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் சிரியா இரசாயன தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறி, கடந்த வாரம் அமெரிக்க கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. சிரியாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் அல்-மொக்தத் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்தார்.
(rizmira)