சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் ஆலோசனை…

சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிரேஷ்ட அதிகாரிகளுக்கு காவல்துறை மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் பின்னர் காவற்துறை மா அதிபரால் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.