சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்…

(FASTNEWS |COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சேவை நிமித்தத்தின் கீழ் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இன்றிலிருந்து இந்த இடமாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொலிஸ் அதிகாரிகள் 05, உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 03, பொலிஸ் பரிசோதகர்கள் 02 என 26 உயரதிகாரிகளுக்கே குறித்த இந்த மாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.