(FASTNEWS|COLOMBO) 13 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்களினால் நாட்டில் ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான தாக்கம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் எல்.எஸ். பத்திநாயக்க, அந்தப் பதவியிலிருந்து, மேம்படுத்தல் துறை பிரதி பொலிஸ்மா அதிபராகவும்;, மேம்படுத்தல் துறை பிரதி பொலிஸ்மா அதிபராக இருந்த எல்.ஏ.எஸ். ப்ரியந்த, கொழும்பு பகுதிக்கு பொறுப்பான பொலிஸ்மா அதிபராகவும் இடமாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன், மேல் மாகாண வட பகுதி பிரதி பொலிஸ்மா அதிபர் ரீ.எம்.டபிள்யு.டீ.தேசபந்துவை புத்தளம் பகுதி பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கவுள்ளதுடன், இவர்களுக்கு மேலதிகமாக மேலும், 10 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடமாற்றம் வழங்க பொலிஸ் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.