பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் மோசமாக நடந்துக் கொண்ட விதம் குறித்து உள்ளுர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மாத்தளை நகரில் சிறுவன் ஒருவரை காரின் பின்பகுதியில் ஏற்றி செல்லும் புகைப்படங்கள் தற்போது வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
ஓய்வுப்பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் இவ்வாறு நடந்த கொண்டதாக தெரிய வருகிறது.
புகைப்படங்களை வைத்து பார்க்கும் போது குறித்த சிறுவன் 10 வயதிற்கு உட்பட்டவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.பி.டி.சுகதபால தெரிவித்துள்ளார்.
தம்புளை பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுப்பெற்ற பிரதி பொலிஸ்மா அதிபரே இந்த சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளார் என மாத்தளை பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி, சிறுவனை வாகனத்தின் பிற்பகுதியில் ஏற்றிச் செல்லும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவத்தினை அங்கிருந்து ஊடகவியலாளர் ஒருவர் புகைப்படமாக எடுத்துள்ளார்.