ஆண்டின் சிறந்த கால்பந்து வீரர் விருதை அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி தட்டிச் சென்றார்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) சார்பில் சிறந்த வீரருக்கான விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும். 2015ம் ஆண்டுக்கான பரிந்துரை பட்டியலில் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்சி, 28, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 30, பிரேசிலின் நெய்மர், 23, இடம் பெற்றனர்.
இதன் விருது வழங்கும் விழா சுவிட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் நடந்தது.
ஐந்தாவது முறை : எதிர்பார்த்த படியே சிறந்த வீரருக்கான ‘பாலன் டி ஆர்’ விருதை மெஸ்சி தட்டிச் சென்றார்.
கடந்த 2009 முதல் 2012 வரை தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இவ்விருது வென்ற மெஸ்சி, தற்போது ஐந்தாவது முறையாக இவ்விருதை தட்டிச் சென்றார்.
தவிர, இவ்விருதை அதிகமுறை வென்ற வீரர் வரிசையில் லயோனல் மெஸ்சி தொடர்ந்து முதலிடத்தில் (5 முறை) நீடிக்கிறார். சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்காவின் கார்லி லாய்டு வென்றார்.