சிறந்த சம்பவத்திற்காக காத்திருக்கும் சர்பராஸ் அஹ்மட்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் கராச்சி நகரில் இன்று(27) இடம்பெறவுள்ளது.

இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள இந்த ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தினையும் காண பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும் திரளாக வர வேண்டும் என பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்பராஸ் அஹ்மட், வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்

வெள்ளிக்கிழமைக்காக என்னால் காத்திருக்க முடியவில்லை. ஏனெனில் அன்று ஒரு சிறந்த சம்பவம் நடைபெறவிருக்கின்றது. அன்றைய தினத்தில் எனக்கு பின்னால் பெரும் திரளான ரசிகர்கள் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்’ என சர்பராஸ் அஹ்மட் கூறியுள்ளார்.

மேலும், அவர்கள் எனக்கு மட்டும் ஆதரவு தராமல் இரண்டு அணிகளுக்கும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 2009-க்குப் பிறகு கராச்சி மைதானத்தில் இருநாடுகளுக்கு இடையிலான நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரலாறு படைக்க இருக்கிறது என கூறியுள்ளார்.

சுமார் பத்து வருடங்களின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20  தொடர் என்பவற்றில் விளையாடவுள்ளது.