சிறந்த பிரபலங்களின் பட்டியலில் அஜித்தை முந்திய விஜய்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பிரபலங்களின் வருவாயை கணக்கில் கொண்டும், சமூக ஊடகம் மற்றும் அச்சு ஊடகங்களில் பிரபலங்களுக்கு உள்ள செல்வாக்கை வைத்தும் கணக்கிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த் 13வது இடத்தையும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 16வது இடத்தையும், நடிகர் விஜய் 47வது இடத்தையும், நடிகர் அஜித் 52வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கர் 55வது இடத்தையும், நடிகர் கமல் ஹாசன் 56வது இடத்தையும், நடிகர் தனுஷ் 64வது இடத்தையும், நடிகை டாப்சி பன்னு 68வது இடத்தையும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் 84வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கேரள திரைப்படத்துறையில், நடிகர் மோகன்லால் 27வது இடத்தையும், நடிகர் மம்மூட்டி 62வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

நடிகர் பிரபாஸ் 44வது இடத்தையும், நடிகர் மகேஷ் பாபு 54வது இடத்தையும் பிடித்துள்ளனர்.