சிறார்கள் 04 பேரை தூக்கிச் செல்ல முற்பட்ட கழுகு (PHOTOS)

அனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த 04 சிறுவர்களில், 7 வயதுடைய சிறுமி ஒருவரை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ள நிலையில், கழுகிடம் போராடி சண்டையிட்ட தாய், குழந்தையை பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளார்.

சிறுமி வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருக்கும் போது வானில் இருந்து பறந்து வந்த கழுகு ஒன்று தாக்கியுள்ளது. சிறுமியின் முதுகு பக்கத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் காயமடைந்துள்ளார்

குறித்த கழுகு, விளையாடிக் கொண்டிருந்த 4 சிறுவர்களையும் நான்கு சந்தர்ப்பங்களில் துரத்தி வந்து தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து கழுகிடம் இருந்து தப்பியுள்ளனர்.

ஆனாலும் பிரதேச மக்கள் இணைந்து பாதுகாப்பாக கழுகினை பிடித்து வனவிலங்கு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கழுகினால் தாக்கப்பட்ட சிறுமி அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.