சிறிய தொழில் முயற்சியாளர்களுக்காக கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்..

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள காணியைப் பயன்படுத்தி சிறிய தொழில் முயற்சியாளர்களுக்காக கைத்தொழில் பேட்டை யொன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, தற்பொழுது தயாரிப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படாத காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் 330 ஏக்கர் காணியில் சுற்றாடலுக்கு பொருத்தமான முறையில் கைத்தொழில் பேட்டையொன்றை அதில் அமைக்கும் முதலாவது கட்டப் பணியின் கீழ் 2019 ஆம் ஆண்டுக்குள் 100 ஏக்கர் காணியை அபிவிருத்திச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைவாக சம்மந்தப்பட்ட அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்குமாக தகுதியான முதலீட்டாளர்களை தெரிவு செய்வதற்காக கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்துக்கு அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.