சிறிய ரக கார்களுக்கான வரியினை குறைப்பது எப்போது – மங்களவிடம் பிரதமர் கேள்வி…

அண்மையில் சிறிய ரக கார்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதினை தொடர்ந்து எப்போது நீக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வினவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவான சிறிய ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்து 1000CC என்ஜின் கொள்ளளவுக்கும் குறைவான என்ஜின்களை கொண்ட வாகனங்களுக்கு நிதி அமைச்சு கடந்த முதலாம் திகதி முதல் வரி விதிக்கப்பட்டிருந்தது.

கொழும்பு நகரில் இலகு ரயில் சேவையொன்று விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இவ்வாறு ஆரம்பித்தால் மோட்டார் வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த சந்தர்ப்பத்திலேயே சிறிய ரக வாகனங்களுக்கு அண்மையில் விதிக்கப்பட்ட வரியை எப்போது நீக்க முடியும் என்பது பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர், நிதி அமைச்சரிடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.