சிறுத்தை கொலை – 10 பேருக்கும் பிணை…

கிளிநொச்சியில் சிறுத்தை ஒன்றை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பத்து பேரையும் பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .

சம்பவம் தொடர்பான வழக்கு இன்று(05) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பொது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 10 பேரையும் தலா ஐந்தாயிரம் ரூபா ரொக்க பிணையிலும், இரண்டு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது