சிறுத்தையை கொலை செய்த நால்வருக்கு விளக்கமறியல்…

கிளிநொச்சியில் சிறுத்தையை அடித்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் ஜூன் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை இன்று(25) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.