(FASTGOSSIP|COLOMBO) – லசித் மாலிங்க ஓர் சிறந்த வீரர், சிறுவர்களை கவர்ந்திழுக்கும் திறன் படைத்தவர் ஆவார் எனவும் அவரின் பந்துவீச்சு முறைமை மற்றும் அவரது சிகையலங்காரம் என்பவற்றை பங்களாதேஷ் சிறுவர்கள் மிகவும் விரும்புறார்கள் என பங்களாதேஷ் அணித் தலைவர் தமீம் இக்பால் தெரிவித்துள்ளார்.
இலங்கை – பங்காதேஷ் உடனான முதலாவது போட்டி நடைபெறுவதற்கு முன்னர் கொழும்பு ஆர். பிரேதாச மைதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்.
“.. லசித் மாலிங்க ஓர் சிறந்த வீரர், அவர் அவரது தாய்நாட்டுக்கு பல வெற்றிகளை ஈட்டிக்கொடுத்துள்ளார். அவரை வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை பல திட்டங்களை தீட்டியிருக்கும். எனினும், நாங்கள் இப்போட்டியில் வெற்றியை ஈட்டுவதற்கு இலங்கையின் சவால்களை எதிர்க்கொள்ளக் காத்துள்ளோம்.
பங்களாதேஷ் சிறுவர்கள் லசித் மாலிங்கவை போல பந்துவீசுவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பொதுவாக லசித் மாலிங்க என்றாலே அவர் அனைவருக்கும் ஒரு ரோல் மொடல் ஆகும். அவரிடம் அதற்கான கவர்ச்சியான திறமை ஒன்று மறைந்துள்ளது. பொதுவாக உலகமே அவரை விரும்புகிறது…” என குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வீடியோ: