சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்..

இந்த ஆண்டின் இது வரையான காலப்பகுதிக்குள் 6165 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

குறித்த முறைப்பாடுகளுள் சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சம்பந்தமாக 1518  முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு கல்வி கிடைக்காமை சம்பந்தமாக 975 முறைப்பாடுகளும், சிறுவர் துஷ்பிரயோகம்  365 முறைப்பாடுகளும், சிறுவர்களை புறக்கணிப்பு செய்தல் சம்பந்தமாக 222 முறைப்பாடுகளும் கிடைத்திருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூறியுள்ளது.

அதேவேளை சிறுவர்களை பிச்சை எடுப்பதற்கு ஈடுபடுத்துவது தொடர்பாக  222 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் கூறியுள்ளது.

இவ்முறைப்பாடுகளுள் 90 வீதமான முறைப்பாடுகள் கிடைத்திருப்பது 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக என்று அவ் அதிகாரசபை தெரிவித்துள்ளது.