சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை இரகசியமான முறையில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் பழைமையான முறைப்பாடுகளை விசாணைக்குட்படுத்தப்படும் போது பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார்.
மேலும்,பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் அக்கரையின்மையே சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கான முக்கிய காரணம் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
ஆகவே சிறுவர்கள் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கோ அறிவிக்குமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.