சிறைக் கைதிகளுடன் பயணித்த சிறைச்சாலை பேரூந்து விபத்து…

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறைச்சாலை பேரூந்து ஒன்று இன்று(05) அதிகாலை 04.00 மணியளவில், காலி சமுத்ர மாவத்தை கடற்படை முகாமிற்கு அருகில்​ பாதையை விட்டு விலகிய பேரூந்து அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் இருக்கின்ற பெண் கைதிகள் 05 பேர் கொழும்புக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு அழைத்து வந்த பேரூந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேரூந்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான பேரூந்தில் இருந்த கைதிகள் காலி சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.