ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, சிறைக் கைதிகள் 285 பேருக்கு இன்று(08) விஷேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.