சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இரகசியமாக வைத்திருக்கும் கையடக்கத் தொலைபேசிகளை இனங்காணுவதற்காக விசேட உபகரணங்களைப் பொருத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கைதிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தி பல வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை தொடர்பில் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க குறிப்பிட்டுள்ளார்.