அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து, தப்பியோடிய சுனில் சாந்த என்ற குற்றவாளி, மீமுரே பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.