சிறைச்சாலையில் கைதிகள் ஆர்ப்பாட்டத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி) -பழைய போகம்பர சிறைச்சாலையில் கூரை மீது ஏறி கைதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரி, போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.