சிறைச்சாலையின் பாதுகாப்புக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பை பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மெற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பில், விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக புலனாய்வுப் பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர், நேற்று(22) மதியம் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டமை குறிப்பிடத்தக்கது. .