(FASTNEWS | COLOMBO) – சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரிகள், சிறைச்சாலை பாதுகாவலர்கள் மற்றும் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 1275 பேரினை புதிதாக இணைத்துக் கொள்ள சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் கீழ், ஆண் காவலர்கள் 1068, பெண் காவலர்கள் 110, இரண்டாம்-வரிசை ஆண் சிறைச்சாலைக் காவலர்கள் 69, இரண்டாம்-வரிசை பெண் சிறைச்சாலைக் காவலர்கள் 10, இரண்டாம்-வரிசை ஆண் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 15 மற்றும் இரண்டாம்-வரிசை பெண் புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் 03 ஆகியோர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இது தொடர்பிலான விண்ணப்பங்கள் இம்மாதம் 29ம் திகதி (நாளை) அரச வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படவுள்ளதோடு, விண்ணப்பங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22ம் திகதி வரையில் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.