சிறைச்சாலை மருத்துவர்களது பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு…

சிறைச்சாலை மருத்துவர்கள் ஒரு வார காலத்துக்கும் மேலாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நேற்று(26) மாலை நிறைவுற்றுள்ளது.

சிறைச்சாலை மருத்துவமனையின் முன்னாள் தலைமை மருத்துவரை இடமாற்றக் கோரியும், புதிய தலைமை மருத்துவர் ஒருவரை நியமிக்குமாறும் கோரிக்கை வைத்து சிறைச்சாலை மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வகையில் புதிய தலைமை மருத்துவராக வைத்தியர் மல்வத்தகே சிறைச்சாலை மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முன்னாள் தலைமை மருத்துவர் நிர்மலி தேநுவர கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)