பேர்பச்சுவல் ட்ரசரீஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசென ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கசுன் பலிசேன மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அர்ஜுன் அலோசியஸ் தொடர்ந்தும் சிறைச்சாலை வைத்தியசாலையில் இல.01 வார்ட் இல் சிகிச்சை பெற்று வருவதோடு, அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாசக் கோளாறு காரணமாக இன்னும் இரண்டு மூன்று நாட்கள் சிகிச்சை பெற்று மீண்டும் கொழும்பு – மெகசின் சிறைச்சாலைக்கு மாற்ற உள்ளதாக சிறைச்சாலை வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#rishma