பிரேசிலில் சிறைச்சாலையை குண்டு வைத்து தகர்த்து கைதிகளை மீட்க முயன்ற பிரிவினர் மீது பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரேசில் நாட்டில் பெலேம் நகரில் சாந்தா இஷாபல் என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலையில் ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பலதரப்பட்ட கைதிகள் இருப்பதால் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று சிறைச்சாலையை உடைத்து கைதிகளை மீட்டு செல்ல ஒரு பிரிவினர் முயன்றனர். முன்னதாக வெடி குண்டு வீசியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 19 பேர் கைதிகள். ஒருவர் சிறை காவலர். இவர்கள் தவிர மேலும் 4 சிறைக்காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த எதிர் தாக்குதல் மூலம் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் தப்பும் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.