சிறையிலிருந்தே வெலே சுதா உட்பட சகாக்களின் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்­த­கம்

மரண தண்­டனை கைதி­யாக வெலிக்­கடை சிறையில் உள்ள பிர­பல சர்­வ­தேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா எனப்­படும் சமந்த குமார உள்­ளிட்ட 7 பேர் சிறையில் இருந்­த­வாறே ஹெரோயின் போதைப் பொருள் வர்த்­த­கத்தில் ஈடு­பட்டு வரு­வ­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவினரின் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது குறித்து சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவு கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பில­பிட்­டி­ய­வி­டமும் அறிக்­கை­யையும் சமர்ப்­பித்­துள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

சிறையில் இருந்­த­வாறு தனது சகாக்­களை பயன்­ப­டுத்தி இந்த ஹெரோயின் வர்த்­த­கத்தை ஏழு­பேரும் முன்­னெ­டுப்­ப­தாக கூறும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு தொலை­பேசி ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் இந்த வியா­பாரம் குறித்த ஆதா­ரங்­க­ளையும் சேக­ரித்­துள்­ளது.

இத­னி­டையே தற்­போது களுத்­துறை சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள மற்­றொரு போதைப் பொருள் வர்த்­த­க­ரான சுரங்க சம்­பத்தை சிறையில் வைத்து விசா­ரிக்க குற்றப் புல­னாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது. அதற்­கான அனு­ம­தி­யையும் பெற்­று­க்கொண்­டுள்ள புல­னாய்வுப் பிரிவு அவ­ரிடம் இந்த விவ­காரம் தொடர்பில் விரைவில் வாக்கு மூலம் பதி­வு­செய்யவுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்லா ஆகியோரின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

(நன்றி – வீரகேசரி)