(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணியை நடாத்த வேண்டாம் என குறித்த தரப்பினர்களுக்கு கட்சித் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
குருணாகலையில் இடம்பெறவுள்ள பேரணி, கட்சித் தலைவரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாமல் இடம்பெறும் செயற்பாடு அவ்வாறான ஒரு செயற்பாட்டில் தாம் பங்கு கொள்ள போவதில்லை என பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை. இதனை தங்கிக் கொள்ள முடியாத சிலர் அங்கும் இங்கும் ஓடித்திரிகின்றனர்.என தெரிவித்தார்.