சில வீரர்கள் தங்கள் திறமைகளை மற்ற வீரர்கள் பயன்படுத்தும் அதே பாணியில்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சில வீரர்கள் தங்கள் திறமைகளை மற்ற வீரர்கள் பயன்படுத்தும் அதே பாணியில் வெளிப்படுத்துகின்றனர்

அந்த வரிசையில் உள்ள சில வீரர்களை பற்றி பார்க்கலாம்.

குஷால் பெரேரா- ஜெயசூரியா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரியா துடுப்பெடுத்தாடும் அதே பாணியில் பட்டையை கிளப்பிகிறார்
இளம் வீரரான குஷால் ஜனித் பெரேரா.

இவரின் அனைத்து ஷாட்டுகளும் அவர் பாணியில் இருப்பதால் இவரை ஜெயசூரியாவுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர்.

தரிந்து குஷால்- முரளிதரன்

இலங்கை அணியின் 22 வயதே ஆன தரிந்து குஷாலின் பந்துவீச்சு முறை முன்னாள் வீரர் முரளிதரனின் பாணியிலே இருக்கிறது.

முரளிதரன் எப்படி தனது சுழற்பந்தால் எதிரணி வீரர்களை திணறடிப்பாரோ அதே ஸ்டைலை பின்பற்றுகிறார் தரிந்து குஷால்.

ஆடம் ஜம்பா- ஷேன் வார்ன்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்ன் பந்தை சமாளிக்க பல முன்னணி வீரர்களும் திணறுவார்கள்.

அந்த அளவு பல மாயாஜாலங்களை அவர் பந்துவீச்சு நிகழ்த்தும். இவரை போலவே இளம் வீரரான ஆடம் ஜம்பாவும் பந்துவீசுகிறார்.