தமிழரசு கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் செல்ல அனுமதிக்கப்படவுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி உறுதியளித்துள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
சிவகரனை நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சென்று பார்வையிட வவுனியா சென்ற போதே இன்று(28) பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரி இவ்வாறு உறுதியளித்துள்ளார்.